உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கையம்மனுக்கும் எளிமையாக நடந்த கூழ்வார்த்தல் விழா

கங்கையம்மனுக்கும் எளிமையாக நடந்த கூழ்வார்த்தல் விழா

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், ஆதவபாக்கம் ஊராட்சியில், ஒரே தெருவில், 15 வீடுகள் உடைய மிகச்சிறிய கிராமமாக பில்லாஞ்சிமேடு உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், வைகாசி மாதத்தில், மாரியம்மனுக்கும், கங்கையம்மனுக்கும், கூழ்வார்த்தல் திருவிழாவும் விமரிசையாக நடைபெறும். ஆனால் இந்தாண்டு, ஊரடங்கு உத்தரவால், பக்தர்கள் கூட்டமின்றி, கூழ்வார்த்தல் விழா நேற்று மிகவும் எளிமையாக நடந்தது.ஒலிபெருக்கி, பம்பை, உடுக்கை, அம்மன் வீதியுலா மற்றும் தெருக்கூத்து இல்லாமல், பக்தர்கள் கூட்டமின்றி, விழா எளிமையாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !