பூவாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1954 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே, வயலூர் பூவாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். அதன்படி, நேற்று, கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர் அபி?ஷகம் செய்யப்பட்டு, மலர் மாலைகள் மூலம், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. பின்னர், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், சமூக இடைவெளியை பின்பற்றி பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.