மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
1948 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
1948 days ago
காரைக்கால்: மத்திய அரசு கோவில்கள் திறக்க அனுமதி வழங்கியதால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் முன்னெச்சரிக்கையாக கோவில் தூய்மை படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளாறு விளங்கி வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருநள்ளாறு வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் அச்சுறுத்தும் வகையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு பல உயிரிழந்து வருகின்றனர்.இதனால் பக்தர்கள் நலன் கருதி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் உள்ள நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க அரசு தடை விதித்து மார்ச் 13ம் தேதி கோவில் நிர்வாகம் நளம் குளத்தில் தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கோவில் நடை மூடப்பட்டது.இதனால் சிறப்பு பூஜைகள்.பரிகாரங்கள் மற்றும் அபிஷேகங்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 60 நாட்களாக சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் யாரும் தரிசனம் மேற்கொள்ளவில்லை ஆனால் தினம் கோவிலின் கால பூஜை மட்டும் நடைபெற்று வந்தது. மத்திய அரசு பக்தர்கள் நலன் கருதி கோவில்கள் வரும் 8-ம் தேதி முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் திருநள்ளார் கோவிலில் அனைத்து பகுதியில் சுத்தம் செய்யும் பணி மற்றும் பக்தர்கள் வரிசை வளாகம். சிவன் சன்னதி மற்றும் பகவான் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் நலன் கருதி கிருமிகள் நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ராஜகோபுர வாசலில் வைக்கப்பட்டுள்ள கைகழுவும் தண்ணீர் குழாய் மற்றும் சனிடைசர் மூலம் நங்கு கைகளைக் கழுவிக் கொண்டு பின்னர் கோவிலுக்கு அனுமதிக்க கோவில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளி விட்டு தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே புதுச்சேரி அரசு அனுமதி வழங்கிய பின்னர் பக்தர்களை அனுமதிப்பது குறித்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.கடந்த 60 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கோவில்கள் திறப்பதால் பக்தர்கள் மன நிம்மதி தேடி பல்வேறு கோவில்களுக்கு செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் இதுபோல் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய கோவில்கள் திறப்பதால் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1948 days ago
1948 days ago