பழநி முருகன் கோயிலில் கும்பாபிஷேக பணி துவக்கம்
ADDED :1947 days ago
பழநி: பழநி முருகன் கோயிலில் 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தது. அதன் பின் 2018ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். கடந்த நவம்பர் இறுதியில் கும்பாபிஷேக பணிக்கான பாலாலய பூஜை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் துவங்கின. அதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதியில்லாத நிலையில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மலைக்கோயில் ராஜகோபுரத்தை சுற்றிலும் சாரம் அமைத்து, சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர்.