சூலுார் நாகமாதா கோவிலில் உலக நன்மைக்காக திருவிளக்கு வழிபாடு
ADDED :1 hours ago
சூலுார்: சூலுார் நாகமாதா கோவிலில், உலக நன்மைக்காக, திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.
சூலுார் – திருச்சி சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி பஞ்சாட்சரி நாகமாதா கோவிலில், 21வது ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழா பிப்., 22ம் தேதி துவங்கியது. 27ம் தேதி பொங்கல் விழா, மகா அன்னதானம் நடத்தப்பட்டன. தொடர்ந்து, உலக நன்மை வேண்டி நடத்தப்பட்ட திருவிளக்கு பூஜையில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, குங்குமம், புஷ்பத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டனர். கூட்டு வழிபாட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதால், திருவிழாவை ஒட்டி, திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டதாக, கோவில் நிர்வாகிகள் கூறினர். நேற்று ஆராட்டு பலி முடிந்து கொடியிறக்கப்பட்டது. ஆராட்டு எழுந்தருளல் மற்றும் பறையெடுப்பு நடத்தப்பட்டது. இதில், கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள், குடும்பத்தோடு பங்கேற்றனர்.