உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ்க்குழந்தை

தமிழ்க்குழந்தை

 சீர்காழியில் பிறந்தவர் திருஞானசம்பந்தர். இவரை முருகனின் அவதாரமாகக் கூறுவர். தந்தையுடன் சென்ற  சிறுகுழந்தையான சம்பந்தர், குளக்கரையில் பசியால் அழுதார். அவரது அழுகையைப் பொறுக்காமல் அம்மையப்பர் காளை வாகனத்தில்  எழுந்தருளினர். அம்பிகையும் ஞானசம்பந்தரின் பசி நீங்க பாலூட்டினாள். இறையருளால் தோடுடைய செவியன் என்று தேவாரத்தைப்  பாடத் தொடங்கினார். ஆதிசங்கரரும் சவுந்தர்யலஹரியில் சம்பந்தரைப் பற்றி பாடியுள்ளார். பர்வதராஜனின் மகளான பார்வதிதாயே!  திராவிட சிசுவிற்கு (தமிழ்க் குழந்தையான ஞானசம்பந்தருக்கு) பாலை வழங்கினாய். அதன் சிறப்பால் அக்குழந்தை பாடும் திறன் பெற்று  எல்லோரையும் கவர்ந்தது, என்று குறிப்பிடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !