விவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்
ADDED :2048 days ago
ராமேஸ்வரம்; ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் கடற்கரையில், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மீது அலைகள் மோதி, தடுப்பு சுவர் சேதமடைந்தது.அடுத்த சில நாட்களில், தென்மேற்கு காற்று சூறாவளியாக வீச வாய்ப்புள்ளது. அப்போது, அலைகள் மண்டபத்தை தாக்கும் அபாயம் உள்ளது.இதை தவிர்க்க, கடலோரத்தில் நேற்று, பாதுகாப்பு அரணாக, மணல் மூட்டைகளை, வனத்துறையினர் அடுக்கினர்.