அருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை
ADDED :2306 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவில் கொடிமரத்தின் அருகிலுள்ள, அதிகார நந்தி, சுவாமி கருவறை எதிரிலுள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, உள்ளிட்டவற்றிற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், பால், பன்னீர், மஞ்சள், இளநீர், எலுமிச்சை, சந்தனம், தேன் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கொரோனா ஊரடங்கால், பக்தர்கள் யாரும் கோவிலினுள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்று பிரதோஷ பூஜை செய்தனர்.