தீயை விட ஆபத்தானது எது?
எச்சரிக்கிறார் புத்தர்
* பஞ்சில் பரவும் தீப்பொறியை விட மனதில் படியும் தீயஎண்ணம் விரைந்து பரவும்.
* மகிழ்ச்சியைத் தேடி அலைய வேண்டாம். அது உன் மனதிலேயே இருக்கிறது.
* அற்பமான ஆசைகளைத் துறந்தால் பேரின்பத்தை அடையலாம்.
* உண்மை மட்டுமே என்றும் நிலைத்திருக்கும் தகுதி கொண்டது.
* ஐம்புலன்களில் இருந்து விடுபட விரும்பினால் ஆசைகளை ஒழியுங்கள்.
* எளிய உயிர்களை பலியிட்டு வழிபடுவது பெரும் பாவம்.
* பொறுமையை கடைபிடிப்பது ஒன்றே உயர்ந்த தவம்.
* செல்வந்தர்களின் மாளிகை துன்பத்தின் இருப்பிடமாகும்.
* அமைதியை விட மேலான சந்தோஷம் வேறில்லை.
* முயற்சியில் ஈடுபடத் தயங்காதீர். தண்ணீர் ஒவ்வொரு துளியாக விழுந்தாலும் குடம் நிரம்பும்.
* உயிர்களை நேசித்து பொதுநலத்துடன் இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழலாம்.
* விழிப்பு, ஊக்கமுடன் செயல்பட்டால் குறிக்கோளை அடைய முடியும்.
* தீமையை விட்டு நன்மை செய்யப் பழகினால் மனம் துாய்மை பெறும்.
* சத்திய வழியில் நடப்பவருக்கு வெற்றி கிடைத்தே தீரும்.
* முட்டாளை அழிக்க தேவையில்லை. அவன் தன்னைத்தானே அழித்துக் கொள்வான்.
* பழங்கள் மரத்திலிருந்து உதிர்வது போல, மனிதனும் ஒருநாள் உலகை விட்டுச் செல்ல வேண்டும்.
* பிறர் சொல்வதை அப்படியே நம்பாமல் அறிவால் ஆராய்பவனே சிறந்தவன்.
* தங்கமும், வெள்ளியும் உண்மையான செல்வம் அல்ல. இவற்றிற்கு பிறர் மூலம் ஆபத்து வரலாம்.
* அநியாயக்காரர்கள் தங்களுக்கு ஒரு முடிவுகாலம் வரும் என்பதை அறிவதில்லை.
* பொறாமை என்னும் தீயினை ஒழித்தால் மன அமைதியுடன் வாழலாம்.
* பயனில்லாத சொற்களைப் பேசுபவன் வாசனை இல்லாத மலருக்கு ஒப்பானவன்.