மருதமலையில் வைகாசி விசாக சிறப்பு பூஜை
ADDED :1945 days ago
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், வைகாசி விசாகத்தையெட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாக, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் வைகாசி விசாகத்தை ஒட்டி காலை, 5:00 மணிக்கு மங்கள வாத்தியங்களுடன் கோமாதா பூஜையும், அதனையடுத்து, சந்தனம், பால், தயிர், நெய், தேன் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களால், மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. காலை, 6:00 மணிக்கு, மூலவர் சுப்பிரமணிய சுவாமி, தங்க காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். உற்சவ மூர்த்திகளான சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். மாலை சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும், வைகாசி விசாக விழா, ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.