உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி விசாகம்: குன்றத்தில் குமரனுக்கு பாலாபிஷேகம்

வைகாசி விசாகம்: குன்றத்தில் குமரனுக்கு பாலாபிஷேகம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா பக்தர்கள் இன்றி நடந்தது.  

கோயிலில் விசாக திருவிழாவை முன்னிட்டு அதிகாலை ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, மூலவர் கரத்தில் உள்ள தங்க வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு சுவாமி  விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார். சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்டது. உற்சவ மூர்த்திகளான சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். மாலை சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும், வைகாசி விசாக விழா பக்தர்கள் இன்றி நடந்தது.  ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !