திருப்பரங்குன்றம் கோயில் முன் நெய் தீபம் நிகழ்ச்சி
ADDED :2044 days ago
மதுரை : மதுரை ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன் மக்கள் வாழ்வாதாரம் மேம்பட நெய் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. திருப்பரங்குன்றம் ராமகிருஷ்ண தபோவன முருகானந்தா சுவாமி தலைமை வகித்தார். நாராயண மட சுவாமிகள் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் சுடலைமணி, துணை தலைவர் கிருஷ்ணா ஒருங்கிணைத்தனர்.