வரசித்தி விநாயகர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
ADDED :2054 days ago
பண்ருட்டி : பண்ருட்டி வரசித்தி விநாயகர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் விநாயகர் சந்தனகாப்பு ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி கஸ்துாரிபாய் வீதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று பவுர்ணமி வெள்ளியை முன்னிட்டு காலை மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.