காஞ்சி மஹா பெரியவரின் அவதார ஜெயந்தி விழா
ADDED :1957 days ago
திருப்பூர்: திருப்பூரில், ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின், 127 வது அவதார ஜெயந்தி கொண்டாடப்பட்டது.திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள, ஸ்ரீ காஞ்சிகாம கோடி பக்த சமாஜத்தில், காஞ்சி மஹா பெரியவா என்றழைக்கப்படும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின், 127வது அவதார ஜெயந்தி, பக்த கோடிகளால் கொண்டாடப்பட்டது. அதில், வேத பண்டிதர்களின் வேத பாராயணம், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா சுவாமிகளின் பாதுகைகளுக்கு சகல திரவிய அபிேஷகம், மலர்களால் அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.பக்தர்கள் பங்கேற்று பாதுகைகளை வணங்கி, பிரசாதம் பெற்று சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை, திருப்பூர் ஸ்ரீ காஞ்சிகாம கோடி பக்த சமாஜ நிர்வாகிகள் செய்திருந்தனர்.