வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஞானப்பால் வழங்கும் ஐதீக நிகழ்ச்சி
ADDED :2061 days ago
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் திருமுலைப்பால் வழங்கும் ஐதீக விழா நடந்தது. பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் திருஞானசம்பந்தருக்கு உமை யம்மை ஞானப்பால் வழங்கிடும் திருமுலைப்பால் உற்சவம் நேற்று நடந்தது. கொரானோ வைரஸ் தடுப்பு பணிகாரணமாக கோவில்களில் பக்தர்கள் அனுமதியில்லாததால் பக்தர்கள் இன்றி நடந்தது. விழாவையொட்டி காலை 9: 30 மணிக்கு ஆகமவிதிப்படி பொற்கிண்ணத்தில் உமையம்மை, அழுது கொண்டிருந்த ஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கியதும். பின்னர் சிவபெருமானுடன் சேர்ந் து பார்வதிதேவி காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி எளிமையாக நடந்தது.