திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் திறப்பு
ADDED :2005 days ago
புதுச்சேரி மாநிலம், காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், 76 நாட்களுக்கு பின், நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை, 6:00 முதல் பகல், 12:00 மணி; மாலை, 4:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடை திறக்கப்பட்டது. ஆறு கால பூஜைகளில், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர்.முதல் நாள் என்பதால், வெளியூர் பக்தர்கள் யாரும் வரவில்லை. உள்ளூர் பக்தர்கள் மட்டும், சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.முன்னதாக, ராஜகோபுர வாசலில், தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் மூலம் கைகளை நன்கு கழுவிய பின், மருத்துவ பரிசோதனை நடத்தி, பக்தர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.