முருகனின் வாகனங்கள்!
ADDED :1993 days ago
முருகனின் வாகனம் மயில். ஆனால், முருகனுக்குரிய மந்திர நூலான கந்தரனுபூதியில் முருகனின் வாகனம் ஆடும் பரி என அருணகிரிநாதர் பாடியுள்ளார். ஆடும் என்பது நடனம். பரி என்றால் குதிரை. குதிரை நடனமாடுவதில்லை. அதனால், மயிலையே ஆடும் பரி என அருணகிரியார் குறிப்பிடுகிறார். வேறொரு பாடலில் மயிலை துரகம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். அதற்கும் குதிரை என்றே பொருள். கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோயில், மருங்கூர் கோயில்களில் உள்ள முருகன் திருவிழாக் காலங்களில் குதிரையில் பவனி வருகிறார். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை முத்துக்குமாரர் கோயில், திருச்சி வயலூர் முருகன் கோயில்களில் முருகப்பெருமான் ஆடு வாகனத்தில் பவனி வருகிறார். சில கோயில்களில் யானை வாகனம் உண்டு.