கள்ளக்குறிச்சி ஐயப்ப சுவாமிக்கு 108 விசேஷ திரவிய அபிஷேகம்
ADDED :12 minutes ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ஐயப்ப சாமிக்கு 108 விசேஷ திரவிய அபிஷேகம் நடந்தது.
சிறப்பு அபிஷேகம் இன்று காலை மகாகணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, நெய், பால், தயிர், மஞ்சள், விபூதி, சந்தனம், இளநீர், எலுமிச்சை உட்பட 108 விசேஷ திரவியங்கள், 108 கனி வகைகள், 108 புஷ்பங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, புஷ்பாஞ்சலி நடத்தி மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அபிஷேகங்களை கோவில் அர்ச்சகர் சதாசிவன் குருக்கள் குழுவினர் செய்து வைத்தார். ஏற்பாடுகளை குமார் குருசாமி குழுவினர் செய்திருந்தனர்.