உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைமேல் தீபமண்டபத்தில் சீரமைப்பு பணிகள்; திருப்பரங்குன்றத்தில் முன்னேற்பாடுகள்

மலைமேல் தீபமண்டபத்தில் சீரமைப்பு பணிகள்; திருப்பரங்குன்றத்தில் முன்னேற்பாடுகள்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபம் அருகில் கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்படும் மண்டபத்தில் இரும்புத் தடுப்புகள் அமைக்கும் பணியும், சீரமைப்பு பணிகளும் நடக்கிறது.


உச்சிப் பிள்ளையார் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் தாமிர கொப்பரை வைத்து கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.‌ அந்த மண்டபத்தின் மேல்பகுதிக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளில் இரும்பு கைப்பிடிகளும், மண்டபத்தில் சேதம் அடைந்த பகுதிகள் சீரமைப்பு பணிகளும், சேதமடைந்த பீடம் அகற்றப்பட்டு புதிதாக பீடமும் கட்டப்பட்டுள்ளது. தீப பீடத்தை சுற்றி 2 அடி அகலத்தில் இரும்பு பிளாட்பாரம், 3 அடி உயரத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அம்மண்டபத்தின் முன்பு, கீழ் பகுதியிலுள்ள பாறைகளிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது. மலையின் அடிவாரத்தில் இருந்து உச்சிப்பிள்ளையார் மண்டபம் வரை செடி, கொடிகள் அகற்றும் பணிகளும் நடக்கிறது. பணிகள் நிறைவடைந்ததும் தீப மண்டபத்தில் சுண்ணாம்பு, காவி அடிக்கும் பணி துவங்கும். தீபம் ஏற்றும் மண்டபத்தில் இதுவரை சவுக்கு மற்றும் மூங்கில்களால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வந்தது. தீபம் ஏற்றியபின்பு காற்றில் நெருப்பு பரவி பல நேரம் மூங்கில்கள் சேதம் அடைந்துள்ளன. அதனால் இந்தாண்டு இரும்பால் அமைக்கப்பட்டுள்ளது என அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !