உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்தியாவின் மிக உயரமான 77 அடி உயர ராமர் சிலை; கோவாவில் நாளை திறக்கிறார் பிரதமர் மோடி

இந்தியாவின் மிக உயரமான 77 அடி உயர ராமர் சிலை; கோவாவில் நாளை திறக்கிறார் பிரதமர் மோடி

கோவா; இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை, கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்கலி ஜீவோட்டம் மடத்தில் நிறுவப்பட்டுள்ளது.  இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (நவ., 28) திறந்து வைக்க உள்ளார்.


கோவாவில் 77 அடி ராமர் சிலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கல சிலை, நாளை புனிதமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் இன்று காலை ஸ்ரீமத் வித்யாதீஷ் தீர்த்த சுவாமியால் துவங்கி நடைபெற்று வருகிறது. நாளை பிற்பகல், பிரதமர் நரேந்திர மோடி, சிலை மற்றும் வளாகத்தில் 3-டி ப்ரொஜெக்ஷன்-மேப்பிங் நிறுவலைத் திறந்து வைக்க உள்ளார்.  அதைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான தரிசனம் மற்றும் சபா காரியக்ரமம் நடைபெறுகிறது. 


நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரதீப் ஜி. பாய், மடத் துறவி வித்யாதீஷ் தீர்த்த் ஸ்ரீபாத் வேடர் கூறுகையில், பார்தகலியை அயோத்தியின் தெற்குப் பகுதியாக உருவாக்கி நாட்டின் மத சுற்றுலா வரைபடத்தில் அந்த இடத்தை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. மடத்தின் 550 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 77 அடி உயர ராமர் சிலைuய பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். 11 நாள் சர்தா பஞ்சசதமனோத்சவம் இன்று நவம்பர் 27ம் தேதி தொடங்கும். இந்த நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பர்தகாலியில் உள்ள பிரதான மடத்தை மடாதிபதி புதுப்பித்து, சமஸ்கிருதத்தில் உள்ள பண்டைய மத நூல்களை ஆராய்ச்சி செய்வதற்கான இடத்தை உருவாக்கியுள்ளார். பிரதான மட வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அறைகளையும் மடாதிபதி கட்டியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !