உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யு -டியூப்பில் ராமானுஜர் திருமஞ்சனம்: பக்தர்கள் எதிர்பார்ப்பு

யு -டியூப்பில் ராமானுஜர் திருமஞ்சனம்: பக்தர்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீபெரும்புதுார் : ராமானுஜருக்கு மாதந்தோறும் நடக்கும் திருவாதிரை திருமஞ்சன நிகழ்வை, யு -டியூப் தளத்தில், நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், தானுகந்த திருமேனியாக அருள்பாலிக்கும் ராமானுஜருக்கு, மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரம் அன்று, திருமஞ்சனம் நடப்பது விஷேசம். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசிப்பர்.இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால், வழிபாடு தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், கடந்த சித்திரை மாதம் நடைபெற இருந்த ராமானுஜரின், 1,003ம் ஆண்டு அவதாரஉற்சவ விழா ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக சித்திரை திருவாதிரை திருமஞ்சன நிகழ்வு, தனியார் மூலம், சமூக வலைதளமான, யு டியூப் மூலமாக, நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதை, நாடு முழுவதும், பல ஆயிரக்கணக்கான கண்டு, ராமானுஜரை தரிசித்தனர்.இதேப்போல், மாதந்தோறும் நடக்கும் திருவாதிரை திருமஞ்சன நிகழ்வை ஹிந்து அறநிலையத் துறையினர் யு -டியூப் வழியே நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !