உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை ஏழுமலையானை ஒரே நாளில் 7,265 பேர் தரிசனம்

திருமலை ஏழுமலையானை ஒரே நாளில் 7,265 பேர் தரிசனம்

 திருப்பதி; திருமலை ஏழுமலையானை, நேற்று முன்தினம், 7,265 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருமலையில், 11ம் தேதி முதல், ஏழுமலையான் தரிசனம் துவங்கப்பட்டது. முதல் நாள், 6,998 பேரும், இரண்டாம் நாள், 6,015 பக்தர்களும், ஏழுமலையானை தரிசித்த நிலையில், மூன்றாம் நாளான நேற்று முன்தினம், 7,265 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். ஆன்லைன் மூலம், 3,000 மற்றும் சர்வ தரிசன டோக்கன்கள், 3,000 என தினசரி, 6,000 டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.ஜூன், 21 வரை சர்வ தரிசன டிக்கெட்டுகளும், 30 வரை விரைவு தரிசன டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தரிசன டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே, மலை பாதை மற்றும் நடைபாதை மூலம், திருமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், 40 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !