விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உழவாரப்பணி
ADDED :1939 days ago
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், பக்தர்கள் சார்பில், நேற்று உழவாரப்பணி நடந்தது.அனைத்து கோவில்களிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, தினப்படி பூஜை வழக்கம்போல் நடந்து கொண்டிருக்கிறது. பக்தர்கள், அவ்வப்போது கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.நேற்று, 15 பேர் கொண்ட பக்தர் குழுவினர், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், உழவாரப்பணி மேற்கொண்டனர். கோவில் உள்பிரகாரம், வெளிப்பிரகாரம், நந்தி மண்டபம், பரிவார மண்டபங்கள், அன்னதான மண்டபம் ஆகிய இடங்களில், தண்ணீர் மற்றும் சோப்பு ஆயில் ஊற்றி கழுவி சுத்தம் செய்தனர். கோவில் வளாகம் முழுக்க கிருமிநாசினி தெளித்தனர்.