உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவில் ஆனி சிறப்பு வழிபாடு

அருணாசலேஸ்வரர் கோவில் ஆனி சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆனி மாதப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. கொரோனா ஊரடங்கால், பக்தர்கள் யாரும் கோவிலினுள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்று பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !