உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் குளத்தில் மரங்கள் அகற்றம்? அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

கோவில் குளத்தில் மரங்கள் அகற்றம்? அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர்:கோவிலுக்கு சொந்தமான குளத்தை, இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதியின்றி சுத்தம் செய்து, அங்கிருந்த மரங்கள் அகற்றப்பட்ட செயல், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான செங்குளம், பள்ளபாளையத்தில் உள்ளது. 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. குளத்தில், ஏராளமான கருவேல மரங்கள் உள்ளன. சாமளாபுரம் குளம் நிறையும் போது, உபரிநீர் இக்குளத்துக்கு வரும்.இப்பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றுவது குறித்து, கடந்தாண்டு சம்மந்தப்பட்ட துறையினர் கூட்டாய்வு நடத்தினர். கருவேல மரங்கள் அதிகம் இருப்பதால், பறவைகள் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடமாக உள்ளது; எனவே, சுற்றுலா தலமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தினர்; இதனால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.இதற்கிடையில், நேற்று, குளக்கரை சுத்தம் செய்யப்பட்டு, குளத்துக்குள் இருந்த சில கருவேல மரங்களை வெட்டப்பட்டுள்ளது என, பொதுமக்கள் சிலர் புகார் செய்தனர்.இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவுப்படி, கோவில் ஊழியர்கள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.கோவில் செயல் அலுவலர் சீனிவாசனிடம் கேட்ட போது, குளத்தை சுத்தம் செய்ய, மரம் வெட்ட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.குளக்கரை சுத்தம் செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நாளை (இன்று) நேரில் ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !