ஆற்றுக்குள் புதைந்திருந்த பழமையான சிவன் கோயில் கண்டுபிடிப்பு
ADDED :1942 days ago
நெல்லூர் : ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே ஆற்றுக்குள் மணல் அள்ளும் போது, பழமையான சிவன் கோயில் இருப்பது தெரியவந்துள்ளது.
நெல்லூர் மாவட்டம், பெண்ணா நதியில், மணல் அள்ளும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கற்கள் இடிபடும் சத்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து அங்கு தோண்டும் போது அங்கு பழமையான சிவன் கோயில் ஒன்று இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள், கோயில் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இது 200 ஆண்டு பழமையான சிவன் கோயில், நாகேஸ்வரன் கோயில், பரசுராமன் கோயில்களில் ஒன்று என பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது.