உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மக்கள் செல்ல தடை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மக்கள் செல்ல தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், கிரிவலப்பாதையில் பொதுமக்கள் செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரில், இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.

திருவண்ணாமலை நகரில் மட்டும், 75க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சியில் உள்ள, 39 வார்டுகளில், 20 வார்டுகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளன. திருவண்ணாமலை நகரில் பெரும்பாலான வீதிகள் தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், கிரிவலப்பாதையில் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம், கூட்டமாக வருகின்றனர். தற்போது, கொரோனா வேகமாக பரவி வருவதால், கிரிவலப்பாதையில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !