கிருத்திகையை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு அலங்காரம்
ADDED :1944 days ago
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் வீரபத்திர சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வள்ளி தேவசேனா சமேதராய் சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை லோகு ஐயர் செய்தார். ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்கள் இல்லாமல் பூஜைகள் நடந்தன.