ஆண்டாள் கோயிலில் விஸ்வரூப கருடன்!
ADDED :1985 days ago
ஆடிப்பூரமும், கருட பஞ்சமியும் அடுத்தடுத்துவரும் நிலையில், பூரத்தில் அவதரித்தஆண்டாளையும், கருடபஞ்சமியில் அவதரித்தகருடாழ்வாரையும் ஒரு சேர தரிசிக்க, திண்டுக்கல் சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு சென்று வரலாம். மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்க வேண்டி, சில மகரிஷிகள் இங்குள்ள மலையடிவாரத்தில் யாகம் நடத்தினர். அசுரன் ஒருவன் யாகம் நடக்க விடாமல் தொந்தரவு செய்தான். யாகம் தடையின்றி நடக்கஅருளும்படி ரிஷிகள் திருமாலை வேண்டினர்.மகாவிஷ்ணுவும் அசுரனை அழித்தார். அந்த கோபத்துடன் சுவாமிஉக்கிரமாக இருக்கவே, ரிஷிகள் மகாலட்சுமியை வேண்டினர். அவள் தன் கணவரை சாந்தப்படுத்தினாள். அதே இடத்தில்,தாயார்களுடன் சுவாமி கல்யாண கோலத்தில் எழுந்தருளினார். அவருக்கு சீனிவாசர் எனதிருநாமம் சூட்டப்பட்டது.