திருவண்ணாமலை தீபத் திருவிழா; சூரிய பிறை வாகனத்தில் அண்ணாமலையார் உலா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் இன்று சூரியபிறை வாகனத்தில் சந்திரசேகர், உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன், முதல் நாள் விழா துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி பல்வேறு வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவில் இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் இன்று சூரியபிறை வாகனத்தில் சந்திரசேகர், உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். உலாவின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரையில் விழுந்து வணங்கி வழிபட்டனர். ஏழாம் நாளான, நவ., 30ம் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும், டிச., 3 அதிகாலை, 4:00 மணிக்கு கோயில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2668, அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.