உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் பந்தகாட்சி சேவை

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் பந்தகாட்சி சேவை

திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் பந்தகாட்சி புறப்பாடு சேவை நடைபெற்றது.


ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில், தெப்பத்திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. ஏழு நாட்கள் நடைபெற்ற விழாவில் தினமும் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, தெப்ப மண்டபத்திற்கு வருகிறார். அங்கு, ஆஸ்தான மண்டபத்தில் இருந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் ஏழாம் திருநாளான நேற்று மாலை திருமஞ்சனம் நடைபெற்றது. பின் பந்தகாட்சி புறப்பாடு சேவை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !