இதிகாச புராணங்களால் நமக்குஉண்டாகும் நன்மை என்ன?
ADDED :1985 days ago
வேதத்தில் கூறப்பட்ட கருத்துகளே சாமான்ய மக்களும் உணரும் விதத்தில் கதை வாயிலாகஇதிகாச புராணத்தில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. சத்தியம், தர்மம் போன்ற நீதிகளை ராமாயணம், மகாபாரதம், பதினெண் புராணங்கள் உபதேசிக்கின்றன. பண்டிதர்கள் மட்டுமே அணுகும் விதத்தில் வேதங்கள் எட்டாத உயரத்தில் இருக்கின்றன. படிக்காதவர்களும் உணரும் விதத்தில் புராணக்கதைகள் கூத்து, நாடகம் வாயிலாக பரப்பப்பட்டன.