உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி திருமஞ்சனம்: சிதம்பரத்தில் துவக்கம்

ஆனி திருமஞ்சனம்: சிதம்பரத்தில் துவக்கம்

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனிதிருமஞ்சன விழா நேற்று துவங்கியது. கொரோனா ஊரடங்கால், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவை கோவிலுக்கு உள்ளேயே நடத்த, தீட்சிதர்கள் முடிவு செய்தனர்.

50 பேர் மட்டும் பங்கேற்று, விழாவை எளிமையாக நடத்த, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இதன்படி, ஆனி திருமஞ்சன விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. சிதம்பரம் கீழ வீதி கோவில் வாயிலில், டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலுக்குள், 50 தீட்சிதர்கள், மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். ஆனி திருமஞ்சன விழாவை, உற்சவ ஆச்சாரியார் சந்தான தீட்சிதர், கொடி ஏற்றி, துவக்கி வைத்தார். கோவில் வரலாற்றிலேயே, பக்தர்கள் பங்கேற்காமல், கொடி ஏற்றியது இதுவே முதல் முறை.தொடர்ந்து, 27ம் தேதி தேரோட்டம், 28ம் தேதி தரிசன விழாவை, கோவிலுக்குள் எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !