உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காமீஸ்வரர் கோவில் நாளை மூடல்

திருக்காமீஸ்வரர் கோவில் நாளை மூடல்

வில்லியனுார் : சூரிய கிரகணத்தை முன்னிட்டு நாளை கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் நடை சாத்தப்படுகிறது. இதுகுறித்து கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சூரிய கிரகணத்தை முன்னிட்டு வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் நாளை (21ம் தேதி) காலை 6:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை நடை சாத்தப்படும். அதனை தொடர்ந்து கிரகண பூஜைக்கு பிறகு மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !