மலைக்குன்று மல்லேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு
ADDED :1938 days ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு கொண்டம்பட்டி, மலைக்குன்று மல்லேஸ்வரர் கோவிலில், அமாவாசையை ஒட்டி மங்களாம்பிகை உடனமர் மங்களநாத சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.கொண்டம்பட்டி மலைக்குன்று மல்லேஸ்வரர் கோவிலில், அமாவாசையை ஒட்டி சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. இதில், பால், பன்னீர், எலும்பிச்சை, சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் போன்றவைகளால் அபிேஷக பூஜை நடந்தது. பின், உத்திரகோச மங்கை கோவில் மூலவர் போன்று, மங்களாம்பிகை உடனமர் மங்கலநாத சுவாமி அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது.