பிள்ளைக் கடவுளின் விளையாட்டு
ADDED :2095 days ago
விநாயருக்கு தலையில் குட்டுவதோடு, தோப்புக்கரணம் இடுவதும் வழக்கம். இதற்கு காரணம் அகத்திய முனிவரே. இவர் கமண்டலத்தில் கங்கையை அடைத்து பொதிகை மலை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். அப்போது விநாயகர் காக வடிவில் முனிவரின் முன் தோன்றி, கமண்டலநீரைக் கவிழ்த்து நதியாக பெருக்கெடுக்கச் செய்தார். வெகுண்ட முனிவர், சிறுவனாக நின்ற விநாயகரைக் குட்டுவதற்கு விரைந்தார். அப்போது விநாயகர், தன் சுயவடிவமான யானை முகத்துடன் காட்சியளித்தார். பிள்ளைக் கடவுளின் விளையாடலை உணர்ந்த முனிவர் தன் நெற்றியில் குட்டிக் கொண்டார். வழிபாடு செய்யும்போது, குட்டிக் கொண்டு வழிபடுவோரின் மனக்குறை போக்க வேண்டும் என்றும் வரம் பெற்றார்.