பத்ரகாளியம்மன் கோவிலில் மகா சண்டி யாக விழா
ADDED :17 hours ago
பல்லடம்: பல்லடம், சிங்கனுார் கொண்டத்து வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு மகா சண்டி யாக விழா நடந்தது.
கடந்த ஜூலை 30-ம் தேதி மாலை முதல் கால பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து மறுநாள் காலை இரண்டாம் கால பூஜை நடந்து, மதியம் நிறைவடைந்தது. இதில் சொந்த வீடு, வாகன யோகம், திருமணம் மற்றும் வம்ச விருத்தி வேண்டி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை தரிசித்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.