உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ஆனி உத்திர அபிஷேகம்

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ஆனி உத்திர அபிஷேகம்

மதுரை : மதுரை மேலமாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில், ஆனி உத்திரத்தை முன்னிட்டு நடராஜர் சிவகாமி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கொரோன வைரஸ் தொற்றால், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று ஆனி உத்திரம் என்பதால், மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில், உட்புறமாக தாழிடப்பட்டு, நடராஜர் சிவகாமி அம்மன் அபிஷேக ஆராதனை நடந்தது. நடராஜர் சிவகாமி அம்மன் அபிஷேக ஆராதனைக்கு பின் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். பக்தர்கள் இல்லாமல், நடந்த வழிபாட்டில், கண்காணிப்பாளர் கணபதி ராம் மற்றும் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !