உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜப்பெருமாள் கோவிலில் ஆண்டு நிறைவு விழா

வரதராஜப்பெருமாள் கோவிலில் ஆண்டு நிறைவு விழா

 பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே குளத்துப்புதுார் ஸ்ரீ பூமிநீளா சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், மகா சம்ப்ரோக் ஷண, 28ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.காலை, 8:30 முதல் மதியம், 12:30 மணி வரை மகா சுதர்சன, தன்வந்தரி, ஹயக்ரீவ ேஹாமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, அபிேஷகம் நடைபெற்றது. அதன்பின், ஒன்பது வகையான மலர்களால் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.*அங்கலகுறிச்சி கோபால்சாமி மலையில், எழுந்தருளியுள்ள நந்தகோபால் சுவாமி கோவிலில், வாராந்திர சிறப்பு பூஜை நடந்தது. நந்தகோபால் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !