காரைக்கால் மாங்கனி விழாவில் திருக்கல்யாணம்
ADDED :1966 days ago
காரைக்கால்; மாங்கனி விழாவில் நேற்று, காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாணம் நடந்தது.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அம்மையார் கோவிலில், மாங்கனி திருவிழா, 1ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம், பரமதத்தர் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. நேற்று காலை, 9:௦௦ முதல், 10:30 மணிக்குள் காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாணம், கைலாசநாதர் கோவில் மணி மண்டபத்தில் நடந்தது. திருமண சடங்குகள் செய்து, கோவில் குருக்கள், புனிதவதியாருக்கு மாங்கல்யம் அணிவித்தார். முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனா பரவல் காரணமாக, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாங்கனி விழா நிகழ்வுகள் அனைத்தும், www.karaikaltemples.com என்ற யு டியூப் சேனல் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.