ஒருவரை எரியூட்டிய இடத்தில் நவதானியம் இடுவது ஏன்?
ADDED :1967 days ago
நவதானியத்தை விதைத்தால் ஓரிரு நாளில் முளை விடும். ‛அவர் போன இடத்தில் புல் முளைத்து விட்டது’ என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள். மயானம் கூட பசுமையாக இருக்க வேண்டும் என்பது வாழ்வியல் நோக்கம். மனிதன் வாழ்ந்த மறைந்த பின் அவனது வம்சம் தழைக்க வேண்டும் என்பது ஆன்மிக நோக்கம்.