உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரத்துறவி விவேகானந்தர் நினைவு நாள்

வீரத்துறவி விவேகானந்தர் நினைவு நாள்

மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் தத்தா.கல்லுாரியில் தத்துவம் பயின்றவர், இறைவன் குறித்த கேள்விகளுடன் சென்று, ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார்; அவரின் போதனைகளை கேட்டு, சீடரானார். ராமகிருஷ்ணரின் மரணத்திற்கு பின், இந்தியாவை உணர்ந்து கொள்ள, நாடு முழுதும் பயணம் மேற்கொண்டு, கன்னியாகுமரியில், கடல் நடுவே உள்ள பாறையில், மூன்று நாட்கள் தியானம் செய்தார்.கடந்த, 1893ல், அமெரிக்காவில் நடந்த, உலக மதங்களின் மாநாட்டில், ஹிந்து சார்பாக பங்கேற்றார். சிகாகோவில், அவர் உரையாற்றிய பின், ஹிந்து கருத்துகளுக்கு, உலக அரங்கில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் நிறுவிய, ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம், உலகம் முழுதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகின்றன. 1902 ஜூலை, 4ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.வீரத்துறவி விவேகானந்தர் காலமான தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !