உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துாய்மையானது சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் தெப்பம்

துாய்மையானது சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் தெப்பம்

 சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் தெப்ப திருவிழா கடந்த ஜனவரியில் நடந்தது. அதன் பின் பராமரிப்பில்லாததால் தெப்பத்தில் குப்பை குவிந்தது. பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு வயல்களுக்கு முதல் போகம் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் போது, இந்த தெப்பத்திலும் நீர் நிறைக்கப்படும். தற்போது தெப்பம் நீரின்றி வறண்டுள்ள நிலையில் தேங்கிய குப்பையால் துர்நாற்றம் வீசியது. கோயில் உழவார பணிக்குழுவினர் சார்பில் தெப்பத்தில் நீர் கசிவு ஏற்படாமல் தடுக்க சிமென்ட் பூசப்பட்டது. குப்பை அகற்றி துாய்மைப்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !