மலை மீது தீபமேற்றி வழிபாடு: பக்தர்கள் கிரிவலம்
ADDED :1921 days ago
ஓசூர்: தளி மல்லேஸ்வர சுவாமி கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு கொப்பரையில் தீபம் ஏற்றி, பக்தர்கள் கிரிவலம் வந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த மாருப்பள்ளி - தாரவேந்திரம் இடையே உள்ள மலை மீது, பழமையான மல்லேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. பவுர்ணமி நாளில் கொப்பரையில் தீபம் ஏற்றி, பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். ஊரடங்கால் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், மூன்று மாதமாக கிரிவலம், பவுர்ணமி வழிபாடு தடைபட்டது. தற்போது கிராமப்புற கோவில்களில், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பவுர்ணமி நாளான நேற்று முன்தினம் மாலை, மல்லேஸ்வர சுவாமி கோவிலில், கொப்பரையில் தீபம் ஏற்றி வழிபட்ட திரளான பக்தர்கள், கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.