உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாச பெருமாள் கோவிலில் ஆனி சிறப்பு வழிபாடு

சீனிவாச பெருமாள் கோவிலில் ஆனி சிறப்பு வழிபாடு

 உடுமலை: உடுமலை, நெல்லுக்கடை வீதி சீனிவாச பெருமாள் கோவிலில், மூலம் நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது. உடுமலை, நெல்லுக்கடை வீதியில், பூமி நீளா நாயகி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. சுவாமிகளுக்கு ஆனி மாதம், மூலம் நட்சத்திரம் சிறப்பு நாளாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, நேற்றுமுன்தினம், பூமி நீளா நாயகி சமேத சீனிவாச பெருமாளுக்கு, பால், பன்னீர் உட்பட 16 வகையான திரவியங்களில், சிறப்பு அபிேஷகம் நடந்தது. மலர் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !