உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜை

பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், குரு பூர்ணிமா பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி கோட்டூர் ரோடு விண்ணளந்த காமாட்சி அம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், குரு பூர்ணிமா பவுர்ணமி விழாவையொட்டி, விண்ணளந்த காமாட்சி அம்மனுக்கு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில்களில் பவுர்ணமியையொட்டி அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று பூஜைகளை நடத்தினர்.கிணத்துக்கடவு கொண்டம்பட்டி, மலைக் குன்று மல்லேஸ்வரர் கோவிலில், பவுர்ணமியை ஒட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. கொண்டம்பட்டி மலைக்குன்று மல்லேஸ்வரர் கோவிலில், பவுர்ணமியை ஒட்டி சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது. இதில், பால், பன்னீர், எலுமிச்சை, சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் போன்றவைகளால் அபிேஷக பூஜை நடந்தது. பின், சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !