வெள்ளி கவசத்தில் தஞ்சை ஹரித்ரா விநாயகர் அருள்பாலிப்பு
ADDED :1915 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பிள்ளையார்ப்பட்டியில் நேற்று நடந்த தேய்பிரை சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு ஹரித்ரா விநாயகர் வெள்ளி கவச அலங்காரத்தில் காட்கியளித்தார்.
தஞ்சையில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 7 கி.மீ தொலைவில் பிள்ளையார் பட்டி என்னும் கிராமம் உள்ளது. இங்கு ராஜ ராஜ சோழனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹரித்திர விநாயகர் உள்ளார். ஹரித்திர என்றால் மங்களம் என்று பொருள், மேலும் இந்த பிள்ளையார் உடல் முழுவதும் சர்ப்பங்களால் பின்னப்பட்டுள்ளதால் இவ்வாலயம் கேது நிவர்த்தி ஸ்தலமாகவும் கருதப்படுகிறது. இங்கு நேற்று சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஹரித்ரா விநாயகர் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.