உலக மக்கள் நலன் வேண்டி வழிபாடு
ADDED :1958 days ago
பெண்ணாடம் : பெண்ணாடம், புத்தேரி, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் வெற்றி விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 10:00 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு உலக மக்கள் நலன்வேண்டி, சிறப்பு வழிபாடு; 10:30 மணியளவில் தீபாராதனை நடந்தது. காலை 10:45 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள வெற்றி விநாயகர் சுவாமிக்கு அபிஷேகம்; 11:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பூஜையின் போது, பக்தர்கள் இன்றி, அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதா கிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.