கொரோனா ஒழிய மகாசண்டி யாகம்
ADDED :2010 days ago
மதுரை: மதுரை ஊமச்சிகுளம் அருகே ஆலத்துார் கற்பகவிநாயகர் கோயிலில் கொரோனா வைரஸ் ஒழிய வேண்டி புறநகர் பா.ஜ., சார்பில் மகா சண்டி யாகம் நடந்தது.மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் யாகத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் நாகராஜன் செய்திருந்தார்.பொருளாளர் சந்திரபோஸ், ஒன்றிய தலைவர் குட்டையன்,நிர்வாகிகள் மகாலிங்கம், அருண்குமார், சோலை மணிகண்டன், வழக்கறிஞர் திருமுருகன், வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.