வாழ்வாதாரம் இழந்த திருப்பரங்குன்றம் கோயில் பூ வியாபாரிகள்
ADDED :2012 days ago
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன் 30க்கும் மேற்பட்டோர் பூக்கடைகள் வைத்துள்ளனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் பூ கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.ஊரடங்கால் கோயில் நடை சாத்தப்படுள்ளதால் பூ வியாபாரிகள் வருமானமின்றி அவதியுறுகின்றனர்.பூக்கடை வைத்திருப்போர் கூறியதாவது: கோயில் திறந்திருந்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 500 வரை சம்பாதிப்போம். ஊரடங்கால் 100 நாட்களுக்கும் மேலாக கோயில் பூட்டப்பட்டுள்ளது. கடை வைக்கமுடியவில்லை. சிலர் கடை வைத்திருந்தாலும் தினம் ரூ. 100க்கு கூட வியாபாரம் நடக்கவில்லை. வேறு தொழில் தெரியாது. அரசு நிவாரணம் வழங்க வேண்டும், என்றனர்.